கோவளம்,
பலத்த காற்றில் தொட்டிலில் கிடந்த இரண்டு மாத குழந்தையுடன் மேல்கூரை பறந்தது. தென்னை மரத்தில் தட்டி மேல்கூரை தொங்கியதால் குழந்தை காயத்துடன் உயிர் தப்பியது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள வெங்ஙானூர் பள்ளி மைதானம் அருகில் வாடகை வீட்டில் குமார்-ஷீபா தம்பதியினர் 3 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். சனிக்கிழமை மாலை தகடு வேய்ந்த மேல்கூரையில் இவர்களது 2 மாத கைக்குழந்தை விநாயகனை தொட்டில் கட்டி படுக்க வைத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலமான காற்று வீசியது. அதில் தொட்டிலுடன் மேல்கூரை பறந்தது. வீட்டின் அருகில் நின்ற தென்னை மரத்தில் தட்டி நின்ற கூரையில், குழந்தை அழுவதையும் வீட்டில் இருந்து பெற்றோரின் அலறலையும் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் உடனடியாக ஏணி வைத்து ஏறி குழந்தையை மீட்டனர். காயமடைந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: