சேலம்,
சிபிஎம் கட்சி சார்பில் நடைபெற்று வரும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து சேலம் மேற்கு மாநகரம் முழுவதும் ஞாயிறன்று வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

போராடுவோம் தமிழகமே எழுவோம் தமிழகமே என்ற முழக்கத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிட்ஸ் கட்சி சார்பில் ஜூன் 8- 14 ஆம் தேதி வரை தமிழகம் தழுவிய 6 முனைகளிருந்து துவங்கிய மாநில பிரச்சார இயக்கத்தினை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சேலம் மாநகர மேற்கு குழு சார்பில் இரு சக்கர வாகனப்பிரச்சாரம் மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி பால் மார்கெட் பகுதியில் வாகன பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். இந்த பயணக்குழு முக்கோணம், எம்.பி.கோயில், கோணேரிக்கரை, சிவதாபுரம், அரியாக்கவுண்டம்பட்டி, ரெட்டிப்பட்டி, காசக்காரனூர், திருவாக்கவுண்டனூர் பை- பாஸ், அகிய இடங்களில் பிரச்சாரம் செய்து 3 ரோட்டில் முடிவடைந்தது. மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி வாகன பிரச்சாரத்தை முடித்து வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன், ஐ.ஞானசௌந்தரி, உள்ளிட்ட மாநகர மேற்கு குழு உறுப்பினர்கள் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: