மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது குளத்தில் மூழ்கி சகோதரிகள் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடையை சேர்ந்தவர் சிவக்குமார், இவரது மகள்கள் மகாலட்சுமி (13) மற்றும் வைஷ்ணவி (10) இருவரும் சின்னப்புத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 5ம் மற்றும் 7 ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் பள்ளி விடுமுறை தினமான ஞாயிறன்று காரமடை அருகே உள்ள பெள்ளாதி குளத்தில் நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளனர். குளத்தில் குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கினர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் காரமடை காவல்துறைக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் குளத்தில் மூழ்கி கிடந்த சகோதிரிகள் இருவரையும் சடலமாக மீட்டனர். பின்னர் உடல்களை பிரேதபரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காரமடை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதிரிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: