அசாம் :

கடந்த 2016ல் கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து அசாமின் அனைத்து மாணவர்கள் சங்கம், அசாம் ஜடியடபாடி யுவா பரிஸத் மற்றும் கிரிஸாக் முக்தி சங்ரம் சமிதி என பல்வேறு அமைப்புகள் மக்களுடன் சேர்ந்து அசாமில் போராட்டத்தை நடத்தி வருகின்றன.

உயர் இலக்கிய அமைப்பாக கருதப்படும் அசோம் சாகித்ய சபா இந்த போராட்டத்தில் முழுமையாக இறங்கியுள்ளது. அம்மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அசோம் கானா பரிஸித் என்ற அமைப்பும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகின்றன. மக்களவையில் வைக்கப்பட்ட குடியுரிமை திருத்த மசோதா 2016யை திரும்பப்பெற வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் ஒற்றை கோரிக்கையாக உள்ளன.

மேலும், 28 அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனாவாலின் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த மசோதா தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் போராட்டமானது தொடர்ந்து வருகின்றன.

Leave a Reply

You must be logged in to post a comment.