மத்தியப்பிரதேசம் :

பாஜக எம்எல்ஏ சம்பலால் தேவ்டா காவலர் ஒருவரை தாக்கி அவருக்கு கொலைமிரட்டல் செய்யும் காட்சி சிசிடிவி காமிராவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் தேவாஸ் மாவட்டத்திலுள்ள உதய் நகர் காவல்நிலையத்தினுள் வைத்து பாக்லி தொகுதி பாஜக எம்எல்ஏ சம்பலால் தேவ்டா சந்தோஷ் இவனாதி என்ற காவலரை தாக்கிய மற்றும் கொலை மிரட்டல் விடுத்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி முழுவதுமாக காமிராவில் பதிவாகியுள்ளது. எம்எல்ஏவின் உறவினர் ஒருவர் காவல்நிலையத்தில் இரண்டு பாலியல் குற்றவாளிகள் இருந்த தடைசெய்யப்பட்ட பகுதிக்கு செல்வதை காவலர் சந்தோஷ் இவனாதி தடுத்ததால் எம்எல்ஏவின் உறவினர் எம்எல்ஏவை வரவழைத்துள்ளார். பின்பு, எம் எல் ஏ காவலரை இருமுறை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உதய் நகர் காவல் நிலைய காவல் அலுவலர் கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: