தீக்கதிர்

உலகிலேயே அதிவேக சூப்பர் கணினி அமெரிக்கவின் சம்மிட்

உலகிலேயே அதிவேக சூப்பர் கணினி (சூப்பர் கம்பியூட்டர்) அறிமுகப்படுத்தியுள்ளது அமெரிக்கா. இந்த அதிவேக சூப்பர் கணினியின் பெயர் சம்மிட் ஆகும். இதற்கு முன்னாள் இருந்த சீனாவின் அதிவேக சூப்பர் கணினியான சன்வே தாய்ஹுவை விர அதிக வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது. சம்மிட் தோற்கடித்துள்ளது. சம்மிட் வினாடிக்கு 200,000 ட்ரிலியன் கணக்கீடுகளின் உச்ச செயல்திறன் கொண்டது. இது சன்வே தாய்ஹுவை விட இருமடங்கு வேகமாக உள்ளது. இந்த சூப்பர் கணினி வினாடிக்கு 93,000 டிரில்லியன் கணக்குகளை கணக்கிடும் ஆற்றல் கொண்டது. 4,608 சர்வர்களை கொண்ட சம்மிட்டின் அளவு இரண்டு டென்னிஸ் மைதான அளவை கொண்டது. தற்பொழுது இக்கணினி  ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் வைக்கப்பட்டுள்ளது.