சிங்கப்பூர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புடன், வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்-உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூர் வந்துள்ளார்.

டிரம்ப்- கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.அமெரிக்க ஜனாதிபதி வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும் சிங்கப்பூர் சென்றடைந்த கிம்மின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன். டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் சிங்கப்பூர் வந்தடைந்தார். உச்சிமாநாடு நடைபெறுவதற்கு முன்பாக, இருநாட்டு தலைவர்களும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை சந்திக்க உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: