திருநெல்வேலி:
சங்கரன்கோவிலில் கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சனிக்கிழமை முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின. சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் 60 சதவீதம் கூலி உயர்வு, விடுமுறை கால சம்பளம் ரூ. 300 என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதேபோல் சுப்புலாபுரம் கிராம  பகுதியைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்
களும் கூலிஉயர்வு கேட்டு போராடி வந்த னர். இந்த நிலையில் கூலி உயர்வு
தொடர்பாக நெல்லை தொழிலாளர் துறை அதிகாரிகள் விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர் களுடன் ஏற்கனவே 4 கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் பாளையில் உள்ள தொழி லாளர் துறை அலுவலகத்தில் மீண்டும் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.

நீண்டநேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. முடிவு
எதுவும் எட்டவில்லை. இதனால் பேச்சுவார்த்தை 5-வது முறையாக தோல்வி யில் முடிவடைந்தது. இதையடுத்து கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வெள்ளி யன்று 40வது நாளாக நீடித்தது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான துணி வீதம் 20 கோடி ரூபாய் வரையிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாளையில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை
அலுவலகத்தில் சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள், விசைத்தறி உரிமை யாளர்கள், அதிகாரிகள் என முத்தரப்பு பேச்சு வார்த்தை மீண்டும் நடைபெற்றது.

இதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் 19 சதவீத கூலி உயர்வு, விசைத்தறி உரிமை
யாளர்களுக்கு 17 சதவீத ஒப்பந்தத் தொகை  உயர்வு வழங்குவது என முடிவு செய்யப்பட் டது. இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இதைத் தொடர்ந்து கடந்த 40 நாட்களாக நடந்து வந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் சனிக்கிழமை முதல் விசைத்தறிகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கின.

Leave A Reply

%d bloggers like this: