போராடுவோம் தமிழகமே’ என்ற முழக்கத்துடன், மத்திய – மாநில அரசுகளின் நாசகர கொள்கைகளை அம்பலப்படுத்தி திருச்சி நோக்கி நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் எருமாடு பகுதியிலிருந்து வெள்ளியன்று புறப்பட்ட பயணத்தை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையிலான இக்குழுவிற்கு பந்தலூர், கூடலூர், உதகை, குன்னூர் ஆகிய இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், என்.அமிர்தம். ஆர். பத்ரி, ஏ,ராதிகா மற்றும் யு.கே.சிவஞானம், மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உரையாற்றினர். 

கொல்லங்கோட்டில் இருந்து ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் புறப்பட்ட பிரச்சாரப் பயணத்திற்கு குமரி மாவட்டம் முழுவதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குலசேகரத்தில் நடைபெற்ற வரவேற்பில் கே.சாமுவேல் ராஜ் பேசினார்.பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக வேலூரிலிருந்து புறப்பட்ட குழுவின் பயணத்தை மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் துவக்கி வைத்தார். வேலூர் மண்டிவீதியில் நடைபெற்ற துவக்கப் பொதுக்கூட்டத்தில் எஸ்.கண்ணன் பேசினார். ஜி.ஆனந்தன், மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, ஏ.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.