திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பி
னர்கள் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற வாய்ப்புள்ள ஒரு இடத்தை கூட்டணியில் இல்லாத கேரள காங்கிரஸ் (மாணி) க்கு ஒதுக்கியதைத் தொடர்ந்து கேரள மாநில காங்கிரஸுக்குள் பெரும் கலகம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் அகில இந்திய
பொதுச்செயலாளர் உம்மன்சாண்டி, மாநிலத்தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரது படங்கள் ஒட்டிய சவப்பெட்டிக்கு மலர் வளையம் வைத்து எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு தொண்டர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அலுவலகக் கொடிக் கம்பத்தில் கறுப்புக் கொடியும் ஏற்றினர்.கேரள மாநிலத்திலிருந்து 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைய உள்ளது. கடந்த முறைகாங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றிபெற்று மாநிலங்களவை துணைத்தலைவரா
கவும் செயல்பட்டுவந்த பி.ஜே.குரியனுக்கு இம்முறையும் வாய்ப்பு கிடைக்கும் அல்லது இளைஞர் காங்கிரசுக்கு வழங்கப்படும் என அக்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 2 ஆண்டுகளுக்கு முன்பு யுடிஎப் கூட்டணியை விட்டு வெளியேறிய கேரள காங்கிரசுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் கேரள மாநிலத்தலைவர்களுக்கு அக்கட்சி
யின் மாநில நிர்வாகியான வி.எம்.சுதீரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கட்சியின் மாநில செயற்குழுவில் இந்த முடிவு குறித்து விவாதிக்காமல் ஒருசில தலைவர்களின் விருப்பத்தின் பேரில் மா நிலங்களவை இடத்தை கேரள காங்கிரஸ் (மாணி) க்கு விட்டுக்கொடுத்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். முன்னணியில் (கூட்டணி) இல்லாதஒரு கட்சிக்கு விட்டுக்கொடுத்
திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எர்ணாகுளம் கட்சி அலுவலகத்துக்கு வெளியே சனிக்கிழமையன்று கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் உம்மன்சாண்டி மற்றும் மாநிலத் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவின் படங்கள் ஒட்டப்பட்ட சவப்பெட்டி வைத்து அதற்கு மலர் வளையம் வைத்து சிலர் தங்களது
எதிர்ப்பை காங்கிரஸ் தலைமைக்கு தெரிவித்தனர். பல்வேறு இடங்களிலும் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை பூட்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் எதிர்பை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.