சென்னை:
தேனி மாவட்டம் குரங்கணி அருகே கொழுக்கு மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற 23 பேர்பலியாகினர். இந்தச் சம் பவம் தொடர்பாக விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வருவாய்த் துறை செய லாளர் அதுல்ய மிஸ்ரா தலை
மையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா சம்பவம் நடந்த குரங்கணி மலைப் பகுதியிலும், மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற பல் வேறு தரப்பினர் மற்றும் காயமடைந்தவர்களிடமும், வனத்துறை அதிகாரி களிடமும் விசாரணை நடத்தி னார். கொழுக்குமலைக்கு அருகே வாழும் மக்களிட மும் தீவிபத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்நிலையில் குரங் கணி தீவிபத்து குறித்த விசாரணை அறிக்கை தயா ராகிவிட்டதாகவும், தற்போது சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருவதால், 27 ஆம் தேதிக்குப் பிறகு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அதுல்ய மிஸ்ரா தெரிவித் துள்ளார்.

 

Leave A Reply

%d bloggers like this: