லக்னோ: 
‘அரசியல்’ சாமியார் ஆதித்யநாத்துக்கும், ‘வியாபார’ சாமியார் ராம்தேவுக்கும், இடையேயான பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால், உத்தரப்பிரதேச அரசு பதஞ்சலி ஆலைக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது.சாமியார் ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம், கடந்த 2016-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் அகிலேஷிடம் உத்தரப்பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில், சுமார் 455 ஏக்கர் நிலத்தை 25 சதவிகித தள்ளுபடி விலையில் பெற்றது. பின்னர் அதில் 86 ஏக்கர் நிலத்தை பதஞ்சலியின் மற்றொரு நிறுவனமான, ‘பதஞ்சலி புட்ஸ் அண்டு ஹெர்பல் பார்க் நொய்டா’ நிறுவனத்திற்கு மாற்ற முடிவு செய்தது. இதற்காக கடந்த மார்ச் 23-ஆம் தேதி புதிதாக அமைந்த ஆதித்யநாத் அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால், இந்த திட்டம் அகிலேஷ் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டதால், ஆதித்யநாத் அரசு அனுமதி அளிக்கவில்லை.

ஆத்திரமடைந்த ராம்தேவும், தனது தொழிற்சாலையை வேறு மாநிலத்திற்கு வழங்கப்போவதாக அறிவித்தார். இவ்விஷயத்தில் சாமியார் ஆதித்யநாத்துக்கும் சாமியார் ராம்தேவும் முட்டிக்கொண்டனர். இதனிடையே சங்-பரிவார் சாமியார்களுக்குள் சர்ச்சை வரலாம் சண்டையாக மாறக்கூடாது என்று யாரோ சிலர் புத்திமதி கூறியிருக்கிறார்கள். பிரச்சனையை ‘பேசி’த் தீருங்கள் என்றும் யோசனை சொல்லியிருக்கிறார். இதையடுத்து, ராம்தேவிடமும், அவரது உதவியாளர் பாலகிருஷ்ண ஆச்சார்யாவிடமும் ஆதித்யநாத் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் மூவருக்குள்ளும் ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதென உத்தரப்பிரதேச அரசு தற்போது முடிவு செய்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.