புதுதில்லி:
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை செல்லாமல் ஆக்கும் விதத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர மறுத்துள்ள மத்திய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
எஸ்சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும்
விதத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை செல்லாமல் ஆக்கும் வகையில்
அவசரச் சட்டம் ஒன்றை கொண்டுவருமாறு கோரிக்கை எழுந்தநிலையில், அவசரச் சட்டம் ஏதும் கொண்டு வரமுடியாது என மத்திய அரசு அறிவித்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. மேற்கண்ட சட்டத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைமை எழுந்துள்ள நிலையிலும் கூட,எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொட
ரில் அதற்கான மசோதாவை அறிமுகப் படுத்தும் உத்தரவாதம் எதையும் அளித்திட
வும் மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்த பின்னணியில் அவசரச் சட்டமும் கொண்டு வர முடியாது என்று கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். மேற்கண்ட சட்டத்தை பொறுத்தவரை ஏற்கெனவே இருந்த நிலையை உறுதி செய்வோம் என்று அளித்த உறுதிமொழிக்கு மாறாக, மத்திய
அரசு முற்றிலும் முரண்பாடான நிலை பாட்டை எடுத்திருக்கிறது.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் விதத்தில் உச்சநீதி
மன்றம் தீர்ப்பளித்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது அமலில் உள்ள சட்டமானது, நாடு முழுவதும் கடுமையான – கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகிவரும் பட்டியலின, பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு எந்த
விதமான நிவாரணத்தையும் வழங்க முடியாமல் தோல்வியடைந்து நிற்கிறது. இது, பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் அப்பட்டமான தலித் விரோத அணுகுமுறையை முற்றாக வெளிச்சத் திற்கு கொண்டு வந்துள்ளது.

எனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கெதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைமையை எதிர்கொள்ளும் விதத்தில் உடனடியாக ஒரு அவசரச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்றும், அதன் மூலம், நாடு முழுவதும் உள்ள பட்டியலின – பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த மக்கள் அரசியலமைப்புச் சட்டரீதியாக தங்களுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ள உரிமைகள் பறிபோய் விடுமோ என்ற பாதுகாப்பற்ற உணர்விலிருந்து மீட்பதற்கு நட வடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வற்புறுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.