அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 33 ஆயிரம் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் 44 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு.
நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம், நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஓரே துறையின் கீழ் ஊழியர்களை கொண்டுவரப்பட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படுகின்ற அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், சிறப்பு விநியோகத் திட்டத்தில் வழங்கப்படுகினற பருப்பு, பாமாயில் நுகர்பொருள் வாணிபக் கிட்டங்கிலிருந்து கடைகளுக்கு எடை குறைவில்லாமல் வழங்கப்பட வேண்டும்.

சேதார கழிவு 3 சதவீதம் வழங்கப்பட வேண்டும். ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட நிலையில் கூடுதலாக 100 சதவீதம் ஆய்வு என்ற பெயரில் அபராதம் விதிப்பது, அடாவடித்தனம் செய்வது, ஊழியர்களை இம்சிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் கூட்டுறவுத் துறை ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். வருகிற 24ம் தேதி சென்னையில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேசன் கடைகளில் பணியாற்றும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக கூட்டுக்குழுவின் சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எல்.பி.எப், சிஐடியு, டி.என்.ஜி.எப்,இ.யூ, ஏ.ஐ.சி.டி.யு,எச்.எம்.எஸ், எம்.எல்.எப், ஏ.ஐ.சி.சி.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. இது தொடர்பாக வெள்ளியன்று திண்டுக்கல்லில் வேலைநிறுத்த ஆயத்த மண்டல மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் பணியாற்றும் ரேசன் கடை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டிற்கு ஜோதிபாசு தலைமை வகித்தார். கருப்புசாமி, அமர்நாத், முத்துராஜ்,அசோகன்,காளிச்சாமி, பரமன், முனியாண்டி, லெனின் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அழகர்சாமி, பால்ராஜ், சாதிக்அலி ஆகியோர் வரவேற்புரையாற்றினர். எல்.பி.எப் பேரவை பொதுச்செயலாளர் பொன்னுராம், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜேந்திரன், ம.பசீர்அகமது, கே.ஆர்.கணேசன், (சிஐடியு),உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.