சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளியன்று(ஜூன்8) கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி, திருவொற்றியூர் பகுதியில் ஒரு பறவை அமர்ந்தாலே மின் மாற்றி அறுந்து விடுவதாகவும் மேலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வெட்டு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இதைச் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமா எனக் கேள்வி வினாவினார்.

இதற்குப் பதிலளித்த மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் இதுவரை 1,66,000 தாழ்வான மின்கம்பங்கள் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. மின்மாற்றிகளுக்குத் தேவைப்படும் காப்பர்களை இதுவரை ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து பெறப்பட்டு வந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டதால் காப்பர் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தக் காரணத்தால்தான் மின்மாற்றிகளைச் சரி செய்ய கால தாமதமாகிறது. இருப்பினும் வேறு இடங்களிலிருந்து காப்பர் பெறப்பட்டு மின்மாற்றிகளைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

Leave A Reply

%d bloggers like this: