சேலம்,
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக சிறை சென்று திரும்பிய வாலிபர் சங்கநிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மே 26ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் 20 பேரை காவல்துறை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களில் 18 பேர் சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மாநகர வடக்கு செயலாளர் சதீஸ்குமார், நிர்வாகி சேகர் ஆகியோரை மற்றொரு பொய் வழக்கில் காவல்துறையினர் மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதனன்று இருவரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இவர்களுக்கு சேலம் மத்திய சிறையில் இருந்து சாமிநாதபுரம் தியாகிகள் ஸ்தூபி வரை வாலிபர் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் என்.பிரவின்குமார், பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: