திருச்சிராப்பள்ளி:
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அடுத்த உத்தமர்கோவில் திருவள்ளுவர் அவென்யூவில் வசிப்பவர் கண்ணன் (43). இவர் அரசு பேருந்து நடத்துநராக பணியாற்றுகிறார். அண்ணா தொழிற்சங்க நிர்வாகியாகவும் உள்ளார். இவரது மகள் சுபஸ்ரீ மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளியன்று சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்று அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது தந்தை கண்ணனுக்கு ஆறுதல் கூறினார்.

கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர். புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா, மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர்கள் கனகராஜ், ரவிச்சந்திரன், புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: