பொள்ளாச்சி,
பொள்ளாச்சி அருகே புதிதாககட்டபட்டு வரும் தனியார் பள்ளியின் மேல்கூரை இடிந்து விழுந்ததில் வடமாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 14பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள ஜமீன் முத்தூரில் தனியாருக்கு சொந்தமான 3 மாடிகள் கொண்டபள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. வெள்ளியன்று இங்கு வழக்கம்போல் 30 மேற்பட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2வது மாடியில் மேற்கூரையில் கம்பி கட்டும் பணி நடந்தது கொண்டிருந்ததுபோது தீடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் மேல் கூரையின் கீழ்பணியில் இருந்த 15க்கும் மேற்பட்ட தொழிலாளர் ஈடுபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டு அலறினர், இதையடுத்து சக தொழிலாளர்கள் மற்றும் அருகில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும். இதுதொடர்பாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் பொதுமக்களின் உதவியோடு ஈடுபாடுகளில் சிக்கியவர்களை ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். இதன்பின் படுகாயமடைந்தவர்களை பொள்ளாச்சி அரசு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் படுகாயம் அடைந்த 14 பேர் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது, இதற்கிடையே காயமடைந்து சிகிச்சை பெற்ற வருபவர்களை பொள்ளாச்சி சார்- ஆட்சியர் காய்திரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இந்த கட்டிட விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.