பொள்ளாச்சி,
கோவை மாவட்டம், பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு வெளி மாநிலங்களிலிருந்து பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்தால் விலை சரிந்துள்ளது.

பொள்ளாச்சியில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு தினமும் டன் கணக்கில் கொண்டு வரப்படும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் சில்லரை மற்றும் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகா, மகாராஷ்ட்ரா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு வரும் பெரிய வெங்காயத்தை பெரும்பாலும் கேரள மாநில வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் வெளிமாநிலங்களிருந்தும் புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. இதில் முதல் தரம் ரூ.15க்கும், இரண்டாம் தரம் ரூ.12க்கும் விற்பனை செய்யப்படுகிறது.a

Leave a Reply

You must be logged in to post a comment.