சென்னை,
சட்டப்பேரவையில் வெள்ளியன்று (ஜூன்8) கதர் மற்றும் கிராமத் தொழில்துறைமானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இத்துறைக்கான கொள்கை விளக்க குறிப்பில் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு:

தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர் இணையம் (டான்சில்க்) முறுக்கேற்றிய பட்டு ஜரிகைகளை விற்பனை செய்கிறது. முறுக்கேற்றிய பட்டு ஜரிகைகளுக்கு மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்துள்ளதால் பட்டுச் சேலைகளின் விலை அதிகரித்துள்ளது. எனவே, பட்டுச்சேலை விற்பனை தேக்கம் ஏற் பட்டுள்ளது. இதன்காரணமாக முறுக்கேற்றியபட்டு ஜரிகை விற்பனை சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த நிதியாண்டில் டான்சில்க் நிறுவனத்தின் லாபம் 30 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: