சேலம்,
சேலத்தில் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மின்சாதன பொருட்கள் எரிந்து சேதமாகின.

சேலம் அருகே கே.ஆர். தோப்பூர் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான 400 கிலோவாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மேட்டூர் மற்றும் நெய்வேலியில் இருந்து மின்சாரத்தை பெற்று தமிழகம் முழுவதும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்நிலையில் வெள்ளியன்று காலையில் உயர் மின்னழுத்த டிரான்ஸ் பார்மர் ஒன்று வெடித்து திடீரென தீ பற்றியது. இந்த தீ பரவ ஆரம்பித்து அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து மின் நிலைய அதிகாரிகள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சூரமங்கலம் மற்றும் ஓமலூரிலிருந்து இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அனைத்தனர், தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சியினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து மின் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் சேதமடைந்த மின்சாதன பொருட்கள் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.