வாஷிங்டன்:
அமெரிக்காவின் ‘நாசா’ ஆய்வு மையம் இன்னும் 20 வருடங்களில் செவ்வாயில் குடியேற முடியும் என்று அறிவித்துள்ளது. உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் செவ்வாயில் குடியேறும் வாய்ப்புகளை விளம்பரப்படுத்தி பயணச்சீட்டை விற்பனை செய்து வருகின்றன. பல லட்சம் கோடீஸ்வரர்கள் இதற்காக முன்பதிவு செய்துவிட்டு காத்திருக்கின்றனர்.அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.கியூரியாசிட்டி துளையிட்டு மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தும் வருகிறது.உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக செவ்வாய் கிரகத்தில் 30 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய கரிமப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த மாதிரிகள் 5 மில்லிமீட்டர் நீளமுள்ள மண் – பாறைகள் மீது காணப்படுபவைகளாகக் காணப்படுகின்றன. இவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பழங்கால ஏரியின் படுகையில் உருவாகியுள்ளன. இதில் மேலும் அடங்கிய தியோப்பனிஸ், டூலீன், பென்சீன் மற்றும் பிற சிறிய கார்பன் சங்கிலிகள், புரோபேன் மூலக்கூறுகள் கண்டறியப்பட்டு உள்ளன.

செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் இருப்பதாக நாசா தெரிவித்தது. 30 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் உயிர் வாழ்க்கையை நடந்திருக்கலாம் என்று நாசா கூறியது.கடுமையான கரிம மூலக்கூறுகள் செவ்வாய் மேற்பரப்பில் உள்ள வண்டல் பாறைகளில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது மட்டும் போதாது. உயிர் வாழ்க்கைக்கு முக்கிய மற்றொரு மூலப்பொருளை மீத்தேன், செவ்வாய் வளிமண்டலத்தில் காணப்பட்டு உள்ளது. பருவகால மாறுபாட்டின் காரணமாக இந்த வாயு கண்டுபிடிக்கப்பட்டது. இதனை நாசா சமீபத்தில் அறிவித்து உள்ளது. இது எதிர்கால திட்டத்திற்கான நல்ல அறிகுறி எனவும் கூறியுள்ளது. கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றால் ஆனது “கரிம” பொருள் என்று விளக்குகிறது நாசா. பெரும்பாலும் மனிதவாழ்க்கையின்” முக்கியப் பொருளாக இவை கருதப்படுகிறது. உயிரி அல்லாதவைகளாகும் இந்த மூலக்கூறுகள் உருவாக்கப்படலாம்.

நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரக இணை நிர்வாகி தாமஸ் சூர்புசென் கூறும் போது, இந்த புதிய கண்டுபிடிப்புகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் வாழ முடியும்; தொடர்ந்து வாழ்க்கையின் ஆதாரங்களைத் தேடமுடியும். எங்களது நடப்பு மற்றும் திட்டமிடப்பட்ட பணிகள் மூலம் செய்வாய் கிரகத்தின் மீது இன்னும் கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும் எனக் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.