சென்னை,
இந்த ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க இயலாத காரணத்தால் குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, டெல்டா மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் விவசாயத்திற்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குறுவை பருவத்தில் 79,285 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற் கேற்ற வகையில், அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை குவிண்டாலுக்கு ரூ. 1,750 மானியம் வீதம் 15,857 குவிண்டால் நெல் விதைகளை மானிய விலையில் விநியோகிப்பதற்கு ரூ. 2 கோடியே 77 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் இயந்திரங்களைக் கொண்டு நெல் நடவு வயலை குறித்த காலத்தில் திறம்பட தயார் செய்வதற்காக, 870 பவர் டில்லர்களும், 860 ரோட்ட வேட்டர்களும் 50 சதவீத மானியத்தில் விநியோகிப் பதற்காக, ரூ. 11 கோடியே 94 லட்சத்து 30 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படும்.

நிலத்தடி நீரை பயன் படுத்துவதற்கு சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பதிவு செய்த விவசாயிகள் தங்கள் விண்ணப் பத்தை திரும்பப் பெற முன்வந்தால், 90 சதவீத மானியம் வழங்கப்படும். டெல்டா பகுதிகளில் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்கள் நிறுவுவதற்காக ரூ. 22 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.மின் இணைப்பு கிடைக்கப் பெறாத டெல்டா விவசாயிகளுக்கு உதவும் வகையில், 2 ஆயிரம் டீசல் இன்ஜின்கள், 50 சதவீத பின்னேற்பு மானியத்தில் வழங்குவதற்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப் படும். இத்தகைய வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு, அரசு அறிமுகப்படுத்தியுள்ள உழவன் கைபேசி செயலி மூலம் பதிவு செய்து கொள்ளலாம். நடவு இயந்திரங்களை கொண்டு நெல் நடவு செய்ய ஏக்கருக்கு ரூ. 4,000 வீதம் ஒரு லட்சம் ஏக்கர் பரப்புக்கு இயந்திர நடவு மேற் கொள்ள 100 சதவீத மானிய உதவித் தொகை வழங்கப்படும். இதற்காக அரசு ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யும்.

சல்பேட் உரத்தை பயன்படுத்துவதற்கு, பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ. 200 வீதம், 80 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் படும். மேலும், 30 ஆயிரம் ஏக்கரில் ஜிப்சம் பயன்படுத்துவதற்காக ஏக்கருக்கு முழு மானியமாக ரூ. 600வீதம் பின்னேற்பு மானியமாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் வழங்கப்படும். குறைந்த நாட்களில், குறைந்த நீரில், அதிக லாபம் தரக்கூடிய பயறுவகைப் பயிர்களை 12,500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 60 சதவீத மானியத்தில் தரமான விதைகள், 50 சதவீத மானியத்தில் திரவ உயிர் உரங்கள், பயறு நுண்ணூட்டக் கலவை மற்றும் இலை வழி டிஏபி உரம் தெளிக்கவும், ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பயறு வகைகளில், சிக்கனமாக பாசன நீரைப் பயன்படுத்தும் வகையில், 2000 தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை நிறுவுவதற்கு சிறு குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து 100 சதவீத மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குவ தற்காக ஒரு கோடியே 99 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

காவேரி டெல்டா, கல்லணை பாசனத்தின் கடைமடைப் பகுதியான வெண்ணாறு பகுதியின் மண் வளத்தினை அதிகரிக்கும் வகையில், பசுந்தாள் உரப் பயிர் சாகுபடி 15,000 ஏக்கரில் மேற்கொள்ள ஏக்கர் ஒன் றுக்கு ரூ.1,200 மானியத்தில் பசுந்தாளுர பயிர் விதைகள் விநியோகிக்கப்படும்.நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறுவை சாகுபடி பரப்பினை அதிகரிக்கும் நோக்கில், 4 அங்குல விட்டம் மற்றும் 6 மீட்டர் நீளத்தில் 30 பி.வி.சி. குழாய்கள் கொண்ட அலகு ஒன்றுக்கு ரூ. 15,000வீதம் 1,500 அலகுகளுக்கு மானியம் வழங்குவதற்காக ரூ. 2 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வாய்க்கால்களை தூர்வாருதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு குழி எடுத்து நடவு செய்தல், உரக்குழி அமைத்தல் போன்ற பணிகளுடன், சிறு, குறு விவசாயிக ளின் வயல்களில் மண் வரப்புகளை அமைத்தல் போன்ற வேளாண் சார்ந்த பணிகள் விவசாயத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். இதற்காக நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் அரசு ரூ. 24 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக, ரூ. 115 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் மதிப் பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த குறுவைத் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை உடனடியாக துவக்குவதற்கு துறை அலுவலர்க ளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.