சேலம்,
ஏஐடியுசி அகில இந்திய பொதுச்செயலாளரிடம் சேலம் உருக்காலை பாதுகாப்பு குழுவினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

ஏஐடியுசி அகில இந்திய செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான அமர்ஜித் கௌர், சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்தார். இதன்பின் அவர் சேலம் உருககாலையை பார்வையிட்டார். அப்போது, மத்திய பாஜக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை மற்றும் தனியார்மய நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்திடக்கோரி சேலம் உருக்காலை பாதுகாப்பு குழுசார்பில் அமர்ஜித் கௌரவிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். இந்த சந்திப்பில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், சிஐடியு மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்வம் உள்ளிட்ட உருக்காலை பாதுகாப்பு குழுவினர் பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: