உதகை,
உதகையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் பிரத்யேக சர்வதேச அஞ்சல் பதிவு மையம் சனியன்று துவங்குகிறது.

நீலகிரி அஞ்சல் கோட்டகண்காணிப்பாளர் குணசீலன் இந்த பதிவு மையத்தை துவக்கி வைக்க உள்ளார். இந்த மையத்தின் மூலம் சர்வதேச பதிவுதபால், சர்வதேச விரைவு தபால், சர்வதேச பதிவுசீட்டு மற்றும் வியாபார ரீதியிலான சர்வதேச பார்சல் சேவை போன்ற சேவைகளை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.மேலும், இம்மையத்தில் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பார்சல்களை பேக்கிங் செய்து அனுப்பப்படும். இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம்காத்திருக்க தேவையில்லை. அஞ்சலகங்கள் மூலம் பதிவு செய்யப்படும் சர்வதேச அஞ்சல்களுக்கான கட்டணம் மிகவும் குறைவானதாகும். இச்சேவை மையத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள 200 நாடுகளுக்கு தபால்களை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு உதகையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தை அனுகலாம் என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: