சென்னை,
விபத்தில் இறக்கும் மின் ஊழியர்களின் ஈமச்சடங்குத் தொகையை உயர்த்தி வழங்க பரிசீலிக்கப்படும் என்று மின்துறை அமைச்சர் கே.தங்கமணி கூறினார்.

பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய துறைமுகம் தொகுதி உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, கந்தப்பசெட்டி தெருவில் பழுது நீக்கும்போது பழனி என்ற மின்ஊழியர் இறந்தார். அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் ரூ.3 லட்சம் நிவாரண நிதியை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.இதற்கு பதிலளித்த அமைச்சர், பழனியின் எஞ்சிய பணிக்காலத்தை கணக்கிட்டு முழுத்தொகையும் அவரது குடும்பத்திற்கு வழங்கப்படும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித்தகுதிக்கேற்ப பணி வழங்கப்படும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.