ஈரோடு,
பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பெண் தையல் தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் சைபி (45). மகளிர் தையலக கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் இயற்கையோடு பெண்மையை இணைந்தே காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்தும், உலக சாதனையை புரியும்வகையிலும் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்ல திட்டமிட்டுள்ளார். இதையொட்டி தனது பயணத்தை புதனன்று உதகையில் இருந்து துவங்கிய அவர் வியாழனன்று காலை ஈரோடு மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.அப்போது அவர் கூறுகையில், பெண்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டே சென்று வருகிற ஜூன் 13 ஆம் தேதி சென்னையில் தனது பிரச்சாரப் பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன் என தெரிவித் தார். இவரின் இந்த முயற்சிக்கு பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரும் ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: