ஈரோடு,
பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிவகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். சிவகங்கை மாவட்டம் கச்சநந்தம் கிராமத்தில் மூன்று தலித் இளைஞர்களை படுகொலை செய்த சாதிய ஆதிக்க சக்தியினர் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், சிவகிரி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னியின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க ஒன்றிய அமைப்பாளர் சசி தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் எ.சகாதேவன், விவசாயத் தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் கே.பி.கனகவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, செயலாளர் பி.பழனிசாமி, விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.சண்முகவள்ளி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் திரளானோர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.