உதகை,
நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து நீட் தேர்வு எழுதிய 89 பேரில் 9 பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பிற்கு சேர மத்திய அரசு நீட் தேர்வை கட்டயாமாக்கியது. இதனை தொடர்ந்து, கடந்த ஆண்டு தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த மாதம் ( மே 6 ) நடந்தது. இந்த தேர்விற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நீலகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த 89 மாணவ, மாணவிகளில் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். நீலகிரி மாட்டத்தில் 9 பேர் தேர்வாகியுள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: