தாராபுரம்,
தாராபுரத்தில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரத்தில் கடந்த ஆண்டு வரை 18 அரசு மதுபான கடைகள் இயங்கி வந்தன. நீதிமன்ற உத்தரவுக்குபின் 8 கடைகளாக குறைந்தது. இந்நிலையில் மூடப்பட்ட கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டதையடுத்து தாராபுரம், பழனி, மதுரை செல்லும் சாலையில் உப்புத்துறைபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.அதன்படி, தாராபுரம்பேருந்து நிறுத்தம் அருகில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பார் வசதியுடன் கடை திறக்க பணிகள் நடந்து கொண்டிருந்தது. இதை பார்வையிட டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வந்தார். இதுகுறித்து தகவலறிந்த உப்புதுறைபாளையம், சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டனர். டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்தகாவல்துறையினர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து அனை வரும் கலைந்து சென்றனர்.

Leave A Reply

%d bloggers like this: