பிலிப்கார்ட்–வால்மார்ட் ஒப்பந்தம் உறுதியான நிலையில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் பிலிப்கார்டின் 77% சதவீத பங்குகளை வால்மார்ட் கைபற்றியது. தற்பொழுது வால்மார்ட்-ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தத்தில் $ 16 பில்லியன் மதிப்புள்ள பங்குதாரர்களிடமிருந்து இந்திய வருமான வரி அதிகாரிகளிடம் வரி பகுப்பாய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் வலுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சி.ஐ.டி.யு., அகில விவசாயிகள் சங்கம், தேசிய மீன்வள கண்காட்சி மற்றும் தேசிய ஹாக்கர் கூட்டமைப்பு, அகில இந்தியா ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கம் (AIOVA), அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT), ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்த ஸ்வாதிஷி ஜகரான் மன்ச் (எஸ்.ஜே.எம்) என 100 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் சிறு வியாபரிகளை பெரிய அளவில் பதிக்கும். ஆயிரக்கணக்கனேர் இதனால் வேலை இழக்க நேரிடும். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யுமாறு சி.ஐ.டி.யு. மற்றும் அகில இந்திய கிஷான் சபா (எஐகேஸ்) கூறியுள்ளது. இதை பற்றி தொழிற்சங்கங்கள் கூறுகையில் :” அமெரிக்க நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளை ஏகபோக தனியுரிமைகளை கைபற்றிக் கொள்ளும் மேலும் பெறு நிறுவனங்களால் நுகர்வோரின் தரவுகளுக்கும் பதிக்கப்படும். வால்மார்ட் நிறுவனம் உலக விநியோக சங்கிலிக்கு பெயர் போனது. சீனாவில் இருந்து குறைந்த விலையில் சரக்குகளை இந்தியாவிற்கு கொண்டுவரும். இதனால் உள்ளூர் வணிகர்கள் பெரிதும் பதிக்கப்படுவார்கள். விவசாய பொருள்கள் , செங்கல், மோட்டார் சில்லறை விற்பனை மற்றும் சிறு தொழில்நிறுவனங்கள் பதிக்க படுவதாக மகாராஷ்டிரா தொழில் சங்கங்களின் சேம்பர் கூறியுள்ளது. ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்த ஸ்வாதிஷி ஜகரான் மன்ச் (எஸ்.ஜே.எம்) இந்த ஒப்பந்தம் தொடர்பான புகார் கொடுத்தது. அந்த புகாரை தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை அனைத்து அரசாங்க முகவர்களிடம் முன்வைத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.