திருப்பூர்,
தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) இரண்டாண்டு மற்றும் ஓராண்டு பயிற்சிக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கும்படி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வழங்கப்படும் தொழிற்பயிற்சிக்கு இரண்டு ஆண்டு மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 10ஆம்  வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், அனைத்து சான்றிதழ்களுடன் (www.skilltraining.tn.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.  இங்கு பயிற்சி வழங்கப்படும் தொழிற்பிரிவுகள்: பிட்டர், டர்னர், இயந்திர வேலையாள், மற்றும் சிஓஇ (உற்பத்தி மற்றும் தயாரிப்பு) பயிற்சிக் காலம்: இரண்டு ஆண்டுகள். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். டிராக்டர் மெக்கானிக் மற்றும் பவுண்டரிமேன் டெக்னீசியன். பயிற்சிக்காலம்: ஓராண்டு. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயர்மேன் தொழில் இரண்டாண்டு பயிற்சிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்கள் தரவரிசைப்படி திருப்பூர் மாவட்ட அளவிலான கலந்தாய்வில் பயிற்சியில் சேர்ந்து பயிலலாம். மாதாந்திர உதவித் தொகை ரூ.500, விலையில்லா மிதிவண்டி, கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சீருடைகள் 1 வருடத்திற்கு 1 செட். 1 செட் காலணிகள் வழங்கப்படும். பயிற்சி முற்றிலும் இலவசம். தொலைபேசி எண்: 04258 230307. 04258230305,9443015919 என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: