ஈரோடு,
சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூடக்கோரி ஜூன் 26ல் பெருந்துறை சிப்காட் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 2,850 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்கூடம் அமைந்துள்ளது.இங்குள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் புகைகளால் அப்பகுதியை சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலைகளால் பாதிப்படைந்த கிராம மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இணைந்து பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் என்ற புதிய அமைப்பை துவங்கியுள்ளனர்.

இவ்வமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து அதனை அப்பகுதியில் இருந்து அகற்றிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன் 26 ஆம் தேதி பெருந்துறை சிப்காட் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.