நீட் தேர்வில் தமிழகத்தில் முதல்மதிப்பெண் பெற்ற மாணவி கீர்த்தனா குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான முறையில் கருத்துக்கள் பல பரவி வருகின்றது. இந்த கருத்து குறித்து அனிதாவின் அண்ணா மணிரத்தினம் அவர்களுடைய முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  அதில் அவர் கூறியதாவது:

கீர்த்தனா நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி(அவரும் என் தங்கை தான்)
இரண்டு வருடங்கள் நீட் கோச்சிங் சென்று கஷ்டப்பட்டு தான் படித்து முதலிடம் பெற்றுள்ளார்..
அப்பா,அம்மா இருவரும் மருத்துவர் என்பதால் பணம் கட்ட கஷ்டமாக இருந்திருக்காது, அனிதாவிற்கும் கீர்த்தனாவிற்குமான சூழல் இடைவெளி மிகப்பெரியதுதான்,ஆனால் படித்து மதிப்பெண் பெற வேண்டும் என்ற தனது வேலையை சிறப்பாக செய்துள்ளார்,அதற்காக வாழ்த்தப்படவேண்டியவர்,பாராட்டப்பட வேண்டியவர்..

ஏதோ அவர்தான் அனிதாவையும்,பிரதீபாவையும் கொலை செய்தார் என்பது போன்று இருவரையும் ஒப்பிட்டு புகைப்படத்துடன் பதிவுகள் வருவது வருத்தமளிக்கிறது..

பல்வேறு வகையான கல்விமுறைகளை ஏற்படுத்தி மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் அரசுதான் குற்றவாளி…

வசதி இருந்தால் நாமும் நம் குழந்தைகளுக்கு,எது தரமான கல்வி என்று நாம் நம்புகிறோமோ அங்குதான் சேர்ப்போம்…

சிபிஎஸ்இ மாணவர்களும் நம் உடன்பிறப்புகள் தான்…

எனினும், அரசுப்பள்ளி,சமூக,பொருளாதார, வாழ்விடம் ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்காக நீட்டை ஒழித்து அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்…

அனிதா மணிரத்தினம் ச ஆ

Leave A Reply

%d bloggers like this: