தில்லி: கிராம அஞ்சல் ஊழியர்களுக்கு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு குறித்து கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைத்த அம்சங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனக்கோரி அஞ்சல் துறை ஊழியர்கள் 15 நாட்களுக்கு மேல் தொடர்ந்து போராட்டம்  நடத்தி வருகின்றனர். இந்த போரட்டம் கிராமங்களின் அஞ்சல் சேவை பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில் தற்பொழுது மத்திய அரசு கிராம அஞ்சல் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

2018-19ல் அவர்களின் ஊதிய கட்டமைப்பு மற்றும் செலவினங்களுக்காக ரூ 1,257.75 கோடியை மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான விவரங்களை மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா வெளியிட்டுள்ளார். இதன்படி ரூ.. 2,295 அடிப்படை ஊதியமாக பெரும் கிராம அஞ்சல் ஊழியர் மாதத்திற்கு 10,000 ரூபாய் கிடைக்கும். 2,775 ரூபாய் பெறுவோருக்கு 12,500 ரூபாய் கிடைக்கும். ரூ.. 4,115 பெற்றவருக்கு மாதத்திற்கு 14,500 ரூபாய் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: