திருச்செங்கோடு,
தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து திருச்செங்கோட்டில் வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தனியார் பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் நடைபெற்று வரும் அநியாய கல்வி கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை எளிய மாணவர்களுக்கான 25 சதவிகிதம் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வைரத்து செய்திட வேண்டும்.

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, பாதுக்காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்செங்கோடு நகர கமிட்டி தலைவர் ஜி.கோபி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்ரவி, மாவட்டச் செயலாளர் இ.கோவிந்தராஜ், திருச்செங்கோடு பகுதி செயலர் என்.கண்ணன், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் கோரிக்கைளை விளக்கிப் பேசினர். சிபிஎம் திருச்செங்கோடு நகரச் செயலாளர் ஐ.ராயப்பன் வாழ்த்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.