சேலம்,
அரசாணை 56யை கண்டித்து சேலத்தில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு பணியில் ஆட்குறைப்பு மற்றும் அரசு பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவை தகர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட ஆதிசேசய்யா, சித்திக் குழுவினை கலைத்திட வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன்ஒருபகுதியாக சேலம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு சங்கத்தின் சேலம் வட்ட கிளை சார்பில் செவ்வாயன்று குழந்தை வேலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.முருகபெருமாள், சி.கே.ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: