திருப்பூர்,
அஞ்சல் ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரியும், கமலேஷ் சந்திரா கமிஷன் அறிக்கையை அமல்படுத்தவும் புதனன்று திருப்பூரில் அஞ்சலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் சம்பள உயர்வு கோரிக்கையும், கமலேஷ் சந்திரா கமிஷன் அறிக்கையை அமல்படுத்திட வலியுறுத்தி யும் மே 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் போராட்டத்தின் 16 ஆம் நாளான புதனன்று திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர் . மேலும், கிளை அலுவலகம் முன்பிருந்து தலைமை தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: