புவனேஸ்வர்:
ஒடிசாவின் சாசன் மாவட்டத்தில், கடந்த மே 3-ஆம் தேதி 16 வயதுச் சிறுமி ஒருவரை, 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். இந்த கொடுமை தாளாமல், அந்தச் சிறுமி மே 23-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக, சம்பல்பூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அப்ஷல் ராஜா, டினு சாஹூ, ஹாடு பஞ்சாபியர், ஆசீர்வாத் பெகரா, அபிலாஷ் பஞ்சாபிசர் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரைக் கைது செய்தனர். இவர்கள் மீது விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மிக விரைவாக, 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், சிறார் குற்றவாளியை சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறும் போக்ஸோ சட்ட சிறப்பு நீதிபதி உதய்பானு ஜெனா தீர்ப்பளித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.