தீக்கதிர்

ஷில்லாங் ஊரடங்கு தொடர்கிறது…!

ஷில்லாங்:
மேகாலயா மாநிலத் தலைநகரான ஷில்லாங்கின் தேம் ஆவ் மாவ்லாங் பகுதியில், கடந்தவாரம் அரசு பேருந்து ஊழியர்களுக்கும் சில பெண் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு, பெரும் மோதலாக வெடித்தது. இந்நிலையில், வன்முறை நடைபெற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட காவல் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.