அகமதாபாத்:
பெட்ரோல் – டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் முறை, மறு பரிசீலனை செய்யப்படாது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வது எங்களுக்கும் கவலைதான்; நாங்களும் இதற்காக வருந்துகிறோம்; எனினும் நீண்ட கால தீர்வை நோக்கி போவதால், நாள்தோறும் பெட்ரோல் – டீசல் விலை மாற்றப்படுவது குறித்து மறு ஆலோசனை செய்யப்படாது என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

மக்களைப் பாதிக்கும் எரிபொருள் விலை உயர்வுப் பிரச்சனையில், இவ்வாறு மத்திய அரசின் பொறுப்பை தட்டிக்கழித்திருக்கும் தர்மேந்திர பிரதான், ‘அதிகரித்து வரும் எண்ணெய் விலையிலிருந்து பெரும் செல்வத்தை ஈட்ட மாநில அரசுகள் முயற்சிக்கக் கூடாது’ என்று ஓசி அட்வைஸ் ஒன்றையும் கூறியுள்ளார். மாநில அரசுகள் நியாயமாகவும், பொறுப்பாகவும் பெட்ரோல், – டீசல் மீது வரி விதிக்க வேண்டும் என்றும் வேதம் ஓதியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: