லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வின் செல்வாக்கை முறியடிக்கும் விதமாக சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.இந்த அணி அண்மையில் நடைப்பெற்ற கோரக்பூர், கைரானா ஆகிய மக்களவை தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவை வீழ்த்தியது. அடுத்தாண்டு மக்களவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் 40 தொகுதிகளில் போட்டியிட பகுஜன் சமாஜ் விரும்புவதாகவும், இதில் சமாஜ்வாதி அதிருப்தி அடைந்திருப்பதாகவும் வதந்திகள் கிளப்பிவிடப்பட்டன.

ஆனால், ‘தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடப்பதாக நாளிதழ்கள்தான் செய்தி வெளியிடுவதாகவும், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதே தற்போதைக்கு உண்மை’ என்றும் அகிலேஷ் கூறியுள்ளார். எனினும், நேரம் வரும்போது தொகுதி பங்கீடு தொடர்பாக பிஎஸ்பி-யுடன் பேசுவோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.