தமிழகத்தில் வலிந்து திணிக்கப்படும் நீட்தேர்வு முறை ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை காவு வாங்கி வருகிறது. கடந்தாண்டு நீட் தேர்வு அனிதாவை காவு வாங்கியது. இந்தாண்டு நீட்தேர்வு பிரதீபாவை காவு வாங்கியிருக்கிறது.

மருத்துவராகும் கனவுடன் படிக்கும் ஏழை எளிய வீட்டு குழந்தைகள் மருத்துவராக முடியும் என்ற நிலை தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த கனவை கலைத்திடும் வகையில் மத்திய அரசு நீட்தேர்வை தமிழகத்தில் வலிந்து திணித்தது. நீர் தேர்வு அமலுக்கு வந்த நாள் முதல்  தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவு படிப்படியாக கானல் நீராக மாறி வருகிறது. குறிப்பாக ஏழை எளியோர் வீட்டு பிள்ளைகள் மட்டுமல்ல நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் கூட மருத்தவராக முடியாத நிலை நீட் தேர்வின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பல லட்சங்களை கொட்டி கொடுத்து நீட் தேர்விற்காக தனியார் பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறும் முறைக்கேற்ப நீட் தேர்வு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது.  இந்நிலையில் மேலும் தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் வகையில் நீர் தேர்வு எழுதுவதற்கான மையங்களை ராஜஸ்தான், கேரளா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கடைசி நேரத்தில் ஒதுக்கீடு செய்தனர். இதனால் மேலும் மாணவர்கள் கடும் மனஉளச்சலுக்கு உள்ளாகினர்.  இதற்கிடையில் ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றால் தனியார் மருத்துவகல்லூரியில் லட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கவேண்டிய நிலைக்கு ஏழை மாணவர்கள் தள்ளப்பட்டனர். இதனால் ஏராளமான மாணவர்கள் மருத்துவபடிப்பு கனவையே கைவிட்டனர். 

இந்தாண்டு நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட வினாத்தாள்கள் மிகவும் குளறுபடியாக இருந்தது. தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான கேள்விகளே தவறாக கேட்கப்பட்டிருந்தது. இப்படி பல்வேறு விதங்களில் நீட்தேர்வின் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டிருககிறது.

இந்நிலையிலேயே பிரதீபாக என்ற மாணவி நீர் தேர்வில் உரிய மதிப்பெண் கிடைக்காத நிலையில் தற்கொலை செய்திருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம், பெருவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்(47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா(42).  இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இரண்டு பெண்கள் உள்ளனர்.மகன் பிரவீண்ராஜ் (21) பி.ஈ மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். இன்னொரு மகள் உமா பிரியா(24) எம்.எஸ்.சி முடித்துள்ளார். தான் படிக்காவிட்டாலும் தனது பிள்ளைகள் படிக்கவேண்டும் என்று மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்தார். இவரது கடைசி மகள் பிரதீபா (வயது18). இவர் சிறுவயதிலிருந்தே மருத்துவம் படிக்கவேண்டும் என்ற கனவோடு படித்து வந்தார்.

அதற்கு ஏற்றார் போல் 10-வகுப்பில் 490 மதிப்பெண் எடுத்து அசத்தினார், பெற்றோர் மகிழ்ச்சியுடன் அவரை படிக்க வைத்தனர். இவரது படிப்பு திறமையை பார்த்த மாவட்ட ஆட்சியர் அவர் மேலும் நன்றாக படிக்க ஒரு  தனியார் பள்ளியில் பிளஸ்1, பிளஸ்-2 படிக்க உதவி செய்தார். அந்த உதவியை வீணாக்காமல் கடந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் 1,125 மதிப்பெண் எடுத்தார். கடந்த ஆண்டு நீட் அமல்படுத்தப்பட்ட போது இவரும் தேர்வு எழுதினார் அப்போது 155 மதிப்பெண் பெற்றார். இந்த மதிப்பெண்ணுக்கு பல பத்து லட்சங்கள் கட்டி தனியார் மருத்துவகல்லூரியில் படிக்க வேண்டுமென்பதால் மருத்துவ கல்லூரியில் சேர்வது தள்ளிப்போனது.

இந்த ஆண்டும் நம்பிக்கையுடன் நீட் தேர்வை பிரதீபா எழுதினார். ஆனால் 39 மதிப்பெண் மட்டுமே பெற முடிந்தது. இதனால் தனது மருத்துவ கனவு இந்த ஆண்டும் தகர்ந்ததை எண்ணி மனம் உடைந்தார் பிரதீபா. இதனால் மனம் உடைந்த மாணவி பிரதீபா இனியும் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாமல் தற்கொலை செய்ய முடிவெடுத்து நேற்று வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டார். அவரை உடனடியாக் உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை மருத்துமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரதிபா உயிரழந்தார். தனது மரணத்திற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ள பிரதிபா நீட் தேர்வில் இந்த ஆண்டும் வெற்றி பெற முடியவில்லை, இனியும் தனது பெற்றோருக்கு பாரமாக இருக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இந்நிலையில் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பிரதிபாவின் தந்தை சண்முகம் கூறும்போது “கடந்த ஆண்டு நீட் தேர்வால் அனிதாவை இழந்தோம், இந்த ஆண்டு என் மகளை பறி கொடுத்துள்ளேன். இனியும் இந்த மரணங்கள் தொடரக்கூடாது என்று கண்ணீர் விட்டு கதறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.