திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் இளைஞர்களை ஒருங்கிணைத்து “யூத் ஃபார் சைன்ஸ்” (அறிவியலுக்கான இளைஞர்கள்) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட அளவிலான இந்த இளைஞர் அமைப்பு துவக்க நிகழ்வு ஞாயிறன்று திருப்பூர் தேவாங்கபுரம் நடுநிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ரவிவர்மா வரவேற்றார். மாநில செயலாளர் தியாகராஜன் இளைஞர்களை வாழ்த்தி பேசினார். யூத் ஃபார் சைன்ஸ் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த அமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவை குறித்துப் பேசினார்.

குறிப்பாக, இளைஞர்களிடம் அறிவியல் பார்வையுடன் இந்த சமூகத்தை அணுக வேண்டியதன் அவசியம் குறித்தும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்குவதன் மூலம் இன்று இளைஞர்கள் சந்திக்கும் கல்வி தரத்தில் உள்ள சிக்கல்கள் மற்றும் வேலைவாய்ப்பு இன்மை பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்றார். இந்த இளைஞர் அமைப்பின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கபட்டது. அதில் தற்போது உடனடியாக சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி ஆய்வு மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது. இந்த அமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக கௌரிசங்கர் தேர்வு செய்யப்பட்டார். நிறைவாக ராஜேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.