பொள்ளாச்சி,
வழித்தடம் மற்றும் மயானத்தை சாதிய ஆதிக்க சக்தியினர் ஆக்கிரமித்து தங்களை விரட்டியடிப்பதாக பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் தலித் மக்கள் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு தாலுகா செங்குட்டைபாளையம் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள பொள்ளாச்சி பிஏபி கால்வாய் பகுதியில் தலித் மக்கள் நடைபாதையாக பயன்படுத்தி வந்த இடத்தில் சாதிய ஆதிக்க சக்தியினர் கோவில் கட்டி, அவ்வழியாக செல்லும் தலித் மக்களை விரட்டியடித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல், தலித் மக்கள் பயன்படுத்தி வந்த மயானத்தையும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழித்தடம் மற்றும் மயானத்தை மீட்டு தரக்கோரி திங்களன்று மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் வீ.தம்பு தலைமையில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம்புகார் மனு அனித்தனர். இம்மனுவினை பெற்றுக்கொண்ட பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், இப்பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.