திருப்பூர்,
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினம் ஜுன் 5 ஆம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது . இதனை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்பதை விளக்கும் வகையில் பிளாஸ்டிக் பையினை துணிபோல் அணிந்து சுற்றுச்சூழல் பாதுகாக்க வலியுறுத்தும் வாசகங்களோடு பள்ளி மாணவ – மாணவிகள் திருப்பூர் அமர்ஜோதி பகுதியிலிருந்து நல்லூர் வரை தனியார் பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

கையெழுத்து இயக்கம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை விளக்கும் வகையில் துண்டுபிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும், ஆட்டோவில் போர்டுகளை வைத்து பல பகுதிகளுக்கு சென்று சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்று உறுதிமொழியோடு பொதுமக்களிடம் கையெழுத்து வாங்குவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர். இதில் எழுத்தாளர் சுப்பரபாரதி மணியன் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.