உடுமலை,
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் சாதிய ஆதிக்கச் சக்தியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 3 பேர்படுக் கொலை செய்தை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் செவ்வாயன்று உடுமலை மத்திய பேருந்துநிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாதிய ஆதிக்கச் சக்தியினர் தாக்குதலில் பலியான அனைத்து குடும்பங்களுக்கு ஐம்பது லட்சம் நிதி உதவியும், படுகாயமுற்று மருந்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவியும் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும். படுக்கொலை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர். மதுசூதனண் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர். குமார், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சி. சுப்பிரமணியம், மாதர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வசந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கி. கனகராஜ், வாலிபர் சங்கத்தின் குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் ஓம்பிரகாஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிர்வாகிகள் என். சசிகலா, ஆர்.வி.வடிவேல், பஞ்சலிங்கம், விவசாய சங்கத்தின் ராஜகோபால், சிஐடியு மோட்டார் சங்கத்தின் சுதா சுப்பிரமணியன் உள்ளிட்ட திராளனோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.