தாராபுரம்,
தாராபுரத்தில் ஊழியர் சீராய்வு குழுவை கலைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஊழியர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் வட்டாடசியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் பி.ராஜி தலைமை வகித்தார். சிக்கன நடவடிக்கை என்ற  பெயரில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் பணி சீரமைப்பு என்ற பெயரில் அரசு துறைகளை ஒப்பந்தமயமாக்கும் அரசாணை 56 ஐ திரும்ப பெறவேண்டும். மேலும், இதற்காக அமைக்கப்பட்ட குழுவை கலைக்கவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. வட்டக்கிளை செயலாளர் என்.ஈஸ்வரமுர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: