கவுகாத்தி:
விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தளத்தில் இருந்து 90 சதவிகிதம் பேர் விலகி விட்டதாக, விஎச்பி-யின் முன்னாள் தலைவர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.

விஸ்வ ஹிந்து பரிசத்தில் இருந்து வெளியேறி, தனிக் கட்சி ஒன்றை தொகாடியா துவங்கியுள்ளார். இந்த கட்சி, 2019 தேர்தலில் மோடியை எதிர்த்துப் போட்டியிடும் என்று ஏற்கெனவே அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில்தான், தனக்கு ஆதரவாக விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்புகளிலிருந்து 90 சதவிகிதம் பேர் விலகி விட்டதாக கூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் மட்டும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த 14 ஆயிரம் பேரில் 13 ஆயிரத்து 900 பேர் ராஜினாமா செய்துள்ளனர். கவுகாத்தி நகரில் பஜ்ரங் தள் பிரமுகர்கள் 820 பேரில் 816 பேர் ராஜினாமா செய்து விட்டனர். விஸ்வ ஹிந்து பரிசத்திலும் அசாம் மாநில ஆலோசகர் சர்மா உள்பட அதன் நிர்வாகிகள் 400 பேரில் 380 விலகி விட்டனர்.

இந்நிலையில், இவர்கள் அனைவரும் விலகியதற்கு காரணம் மோடிதான் என்றும், விலகியவர்கள் அனைவரும் 2019 தேர்தலில் மோடிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதற்கு தயாராகி வருவதாகவும் தொகாடியா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: