ராஞ்சி:
பாஜக ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் ஜார்க்கண்ட்டும் ஒன்றாகும். இங்கு கிரிதிஹ் அருகே உள்ள டும்ரி பகுதியில் சாவித்ரி தேவி என்ற 58 வயதான பெண் ஒருவர், பட்டினியால் துடித்து பலியான துயரம் நடந்துள்ளது.

‘ரேசன் கார்டு கேட்டு, சாவித்ரி தேவி எவ்வளவோ போராடியும், அதிகாரிகள் அதனை வழங்காததே, இந்த கொடுமைக்கு காரணம்’ என்று அந்த பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
‘சாவித்ரி தேவிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள், அவர்கள் எப்போதாவது வெளியே வேலைகளுக்குச் சென்று, தாயாருக்கு ரொட்டி வாங்கித் தருவார்கள்; ஆனால் அவர்களுக்கும் வேலை இல்லாததால், கடந்த 3 நாட்களாக சாவித்ரி தேவிக்கு உணவு கிடைக்கவில்லை; ரேசன் கார்டு இருந்திருந்தால், அவருக்கு உணவு கிடைத்திருக்கும்’ என்று கூறும் பொதுமக்கள், ரேசன் கார்டு விஷயத்தில் அதிகாரிகள் காட்டிய அலட்சியம் ஒரு உயிரைப் பறித்து விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சாவித்ரி தேவி உயிரிழந்த சம்பவம், பெரும் கவலையை ஏற்படுத்துவதாக டூரி தொகுதி எம்.எல்.ஏ. ஜகார்நாத் மஹோ தெரிவித்துள்ளார். மூதாட்டியின் இறப்பிற்கு அதிகாரிகளின்தான் அலட்சியமே காரணம் என்று அவரும் குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவையில் இப்பிரச்சனையை கட்டாயம் எழுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: